இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல்பிஹாரி வாஜ்பாய், அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினை அறிமுகம் செய்தார். இத்திட்டம் ஏழை மக்களும் முதுமைக் காலத்தில் ஓய்வூதியத்தொகை பெற வேண்டும் எனும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். தபால் மற்றும் வங்கிகள் வாயிலாக இந்த திட்டத்தில் நீங்கள் இணையலாம். இத்திட்டத்தில் 40 வயதுடைய இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் இணைந்து முதலீடு செய்யலாம். இவற்றில் முதலீட்டாளர்களின் பங்களிப்பை பொறுத்து அவர் 60 வயதை எட்டும்போது ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூபாய்.1000 -ரூ.5000 வரை பென்ஷன் வழங்கப்படும். இத்திட்டம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதில் புது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வருமானவரி தாக்கல் செய்யும் நபர்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1, 2022 (அல்லது) அதற்குப் பின் சேரும் சந்தாதாரர் வருமானவரி செலுத்தத் தகுதியானவர் என கண்டறியப்பட்டால் அவரது அடல் யோஜனா கணக்கு மூடப்படும்.
அத்துடன் அவர்களின் பணம் திருப்பிசெலுத்தப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாற்றம் குறித்த தகவல் சென்ற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்ற மார்ச்மாத இறுதி நிலவரப்படி இந்த அடல் யோஜனா திட்டத்தில் 4.01 கோடி பேர் இணைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன் கணக்கு தொடங்கியவர்கள் இந்த திட்டத்தின் பலன்களை தொடர்ந்து பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.