Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி ஆதார் அட்டையை ID-ஆக யூஸ் பண்றீங்களா…? அப்போ உங்களுக்கு ஒரு அலெர்ட்… இத பண்ணாதீங்க…!!!

முன்பெல்லாம் அடையாள அட்டை என்றால் அது ரேஷன் கார்டு தான். ஆனால் தற்போது ரேஷன் கார்டு ரேஷன் கடையில் மட்டும்தான் பயன்படுகின்றது. மற்ற இடத்தில ஆதார் கார்டு மட்டும் தான் அடையாள அட்டையாக பயன்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அது ஒரு தனிநபரின் அடையாளமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆதார் அட்டையை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆதார் அட்டையை ஆதார் நம்பரை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.

ஆதார் அட்டை எண்ணை யாருடனாவது பகிர்ந்தாலும் சரி அல்லது ஆன்லைன் தளங்களில் பகிர்ந்தாலும் சரி அது எப்பவுமே பாதுகாப்பாக இருக்காது. ஆதார் நம்பரை ஷேர் செய்யும் உங்களின் பழக்கத்தை நீங்கள் கை விடுவது மிகவும் முக்கியம். ஆதார் அடையாள சான்றாக பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். முக்கிய இடங்களில் முக்கிய தளங்களில் ஆதார் அட்டையை பயன்படுத்த விரும்பினால் அதற்கு பதிலாக நீங்கள் மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் உங்கள் ஆதார் அட்டை எண்ணை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன?

மாஸ்க்டு ஆதார் என்பது பயனாளர்கள் தங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் நகரில் உள்ள தங்கள் ஆதார் எண்ணை மறைக்க அனுமதிக்கும் ஒரு விருப்பம். மாஸ்க்டு ஆதார் நம்பர் ஆனது உங்கள் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களை சில எழுத்துக்களுடன் “xxxx-xxxx” என்கிற க்ராஸ்கள் கொண்டு மாற்றும். அதேநேரத்தில் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே அதில் இருக்கும். ஆதார் அட்டையை போல் பயன்படுத்தக்கூடியது. இதை நீங்கள் பல இடங்களில் ஐடி ஆதாரமாகப் பயன்படுத்தலாம். இது உங்கள் ஆதார் அட்டையை எந்த விதத்திலும் பாதிக்காது.

மாஸ்க்டு ஆதார் எப்படி டவுன்லோட் செய்வது? 

முதலில் https://eaadhaar.uidai.gov.in/ என்கிற இணைப்பிற்குள் நுழைந்து, பின்னர் உங்கள் ஆதார் நம்பரை பதிவிட வேண்டும்.

அடுத்ததாக ‘I want a masked Aadhaar?’  என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். பின் குறிப்பிட்ட Captcha வெரிஃபிக்கேஷனை நிகழ்த்தவும்

அடுத்ததாக ‘Send OTP’ என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் கிடைக்கப்பெற்ற OTP-ஐ பதிவிட்டு உங்களின் e-Aadhaar காப்பியை டவுன்லோட் செய்து கொள்ளவும், அவ்வளவுதான்.

Categories

Tech |