பெரம்பலூரில் குடும்பத்தகராறு காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு அதன் பின் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் இவரது மனைவி சூர்யாவுக்கும், இருவருக்கும் இடையே குடும்ப தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயராமன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆற்றங்கரையோரம் உள்ள மரத்தில் ஜெயராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த வி.களத்தூர் காவல்துறையினர் ஜெயராமனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.