Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படி தான் நடக்குது..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி ( 24 ) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த காளீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அதன்பின் அங்கிருந்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காளீஸ்வரிக்கு திருமணம் முடிந்து நான்கு வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ காசி செல்வியும், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |