எகிப்தில் உள்ள எல்-டோர் என்ற நகரத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 14 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 17 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அதிகாரிகள் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் தான் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் எகிப்தில் டிராபிக் விதிகள் மற்றும் சாலை கட்டமைப்புகளை சரியாக பின்பற்றாத காரணத்தினால் தான் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் எகிப்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.