Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி எழுந்த புகார்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேர் கைது…

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பாண்டியூர் கிராமத்தில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நயினார்கோவில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது பண்டியூரை சேர்ந்த முத்துக்குமார், மாயா ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து முத்துக்குமார், மாயா ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |