அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையத்தை அடுத்துள்ள குன்னத்தூர் கொரங்காட்டு தோட்டம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 1 1/2 வயதில் சுதர்சன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சுப்பிரமணிக்கும் நந்தினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த நந்தினி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற ஜோடர்பாளையம் காவல்துறையினர் நந்தினியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருமணமான இரண்டு ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசியும் விசாரணை நடத்தி வருகின்றார்.