செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் பாரதிநகர் என்ற பகுதியில் செல்வகுமார் மற்றும் லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ராதாகிருஷ்ணன் என்ற 12 வயது மகனும் செல்வி என்ற 6 வயது மகளும் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் ஏழாம் வகுப்பு படித்து வந்த நிலையில், செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்தான். சிறுவன் ராதாகிருஷ்ணன் செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுவதால் அவரது தாய் லட்சுமி கண்டித்திருக்கிறார். அதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுவன் ஆத்திரமடைந்து வீட்டில் இருக்கின்ற படுக்கை அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
ராதாகிருஷ்ணன் வெகுநேரமாகியும் அறையைவிட்டு வெளியே வராத காரணத்தால் பெற்றோர் அறையின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்தனர். உடனடியாக செல்வபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆனது அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.