Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை போட்ட பெற்றோர்…. மாணவியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டதால் மனமுடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி பகுதியில் இருளாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகள் ஜனனி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து இருளாண்டி மற்றும் விஜயா அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளது இதனால் பெற்றோர் சண்டை போடுவதை பார்த்து ஜனனி மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இதனால் வாழ்வில் விரக்தியடைந்த ஜனனி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது அறையில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போடி டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜனனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |