Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை…. “மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை முயற்சி”… அதிர்ச்சியடைந்த கணவர்… பின் நடந்தது என்ன?

கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகிலுள்ள பெரியபுத்தூர் ஏரிகாடு பகுதியில் 32 வயதான தியாகராஜன் மற்றும் இவரது மனைவி 29 வயதான ரேவதி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர் .

மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான தியாகராஜன் வெள்ளி பட்டறையில் வேலை பார்த்து வருகிறார் . இவர்களுக்கு 12 வயதான ஜனனி ஸ்ரீ மற்றும் ஒன்பது வயதில் வேதிகா ஸ்ரீ என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தியாகராஜனின் மனைவிக்கு கணவர் மாற்றுத்திறனாளியாக இருப்பது பிடிக்காததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது . மேலும் கடன் பிரச்சினையால் சண்டை வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டிலிருந்த ரேவதி இரண்டு மகள்களுக்கும் மனதை கல்லாக்கி கொண்டு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் .

பின்னர் விஷம் கலந்த சாப்பாட்டை அவரும் சாப்பிட்டு 3 பேரும் வீட்டுக்குள் மயங்கிய நிலையில் இருந்தனர் . இந்த நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தியாகராஜன் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்த மனைவி மற்றும் மகள்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் . உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் .

ஆனால் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இளைய மகள் வேதிகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ரேவதி, ஜனனி ஸ்ரீ ஆகிய 2 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

இந்த சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .குடும்பத் தகராறில் மகளை கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Categories

Tech |