அதிபர் டிரம்ப் ஒரு பேட்டியில் பங்கேற்றபோது சர்ச்சை எழுப்பும் ட்வீட் கருத்துக்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது மட்டுமில்லாமல் பல சிக்கலில் மாட்டி விமர்சனங்களுக்கு ஆளாவார். சமீப காலங்களில் டிரம்ப் “வெள்ளை சக்தி” மற்றும் யூத எதிர்ப்பு செய்திகளுடன் பதிவுகளை மறு டுவீட் செய்ததற்காகவும், “பயர்பாசி” ஹேஷ்டேக்கை கொடுத்தது, இது போன்று பல இடங்களில் அவர் மாட்டி கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது தனது டுவீட் பற்றி “அடிக்கடி” கவலைக் கொள்வதாக ஏற்றுக் கொண்டார்.
இது குறித்து டிரம்ப் பார்ஸ்டூல் ஸ்போர்ட்ஸ்க்கு கொடுத்த பேட்டியில், “முந்தைய காலங்களில் மக்கள் கடிதம் எழுதி, அதை அனுப்புவதற்கு முன்பாக ஒரு நாள் அமரவைத்து, மறுபரிசீலனை செய்வதற்காக நேரம் கொடுத்தனர். ஆனால் நாம் அதை டுவிட்டரில் செய்ய மாட்டோம், இல்லையா?” “நாம் நமக்கு தோன்றிய கருத்தை உடனடியாக , வெளியிட்டு விடுகிறோம். அதன்பின் நீங்கள் அதிக தொலைபேசி அழைப்புகளைப் பெறத் தொடங்குகிறீர்கள்,‘ நீங்கள் உண்மையிலேயே இதை கூறினீர்களா? என்ற கேள்விக்கு மறு டுவீட் தான் உங்களை பிரச்சனையில் சிக்க வைத்துவடுகிறது.” நன்றாக உள்ளது என்று நினைத்து செய்யும் டுவிட்டை நீங்கள் விசாரிப்பதில்லை” என அவர் கூறி உள்ளார்.