மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் அருகில் ஆற்காடு முள்ளுக்குடி தெருவில் வசித்து வந்த சந்திரகாசுவின் மனைவி கஸ்தூரி(46). இந்த தம்பதிகளுக்கு அருண்குமார்(19) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். சந்திரகாசு முன்னாடியே இறந்துவிட்ட நிலையில் தன் மகன் அருண்குமாரை மீன்சுருட்டி அருகே சலுப்பை கிராமத்தில் உள்ள தனது அக்காள் உமாராணி வீட்டில் கஸ்தூரி தங்க வைத்து ஆறாம் வகுப்பு முதல் படிக்க வைத்து வந்துள்ளார். இப்போது அருண்குமார் ஜெயம்கொண்டம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அருண்குமார் அடிக்கடி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து கஸ்தூரி கண்டித்துள்ளார். பின் அருண்குமார் குளத்திற்கு குளிக்க சென்று வருவதாக கூறி சென்ற நிலையில் திரும்பி வீட்டிற்கு வரவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் கஸ்தூரி மகனை தேடிச்சென்று பார்த்தபோது அங்கு உள்ள ஒரு மரத்தில் அருண்குமார் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதுதொடர்பாக கஸ்தூரி மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.