Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி தகராறு….. ஆத்திரத்தில் கணவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி…. பெரும் பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனை எதிரில் வசித்து வருபவர் கார்த்திக் (29). இவர் மொத்தமாக கட்டுமானப் பொருள்களை வாங்கி சில்லரை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு சத்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஜூலை 5ஆம் தேதி அதிகாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சந்தியா கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த கார்த்திக்கை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனே அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து போலீசார் சந்தியா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் கணவரை மனைவியை தீவைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |