நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால் பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின்நெருக்கடி குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவியான சாக்ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சாக்ஷி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது “ஜார்கண்ட் மாநிலத்தின் வரி செலுத்துபவராக இங்கு பல வருடங்களாக மின் நெருக்கடி பிரச்சனை ஏன் இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்களது பங்கைச் சரியாக செய்து வருவதன் வாயிலாக மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.