Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படுகிறது” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வீரமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படுவதால் மன உளைச்சலில் இருந்த வீரமுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |