Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி விபத்து நடக்கிறது” மஞ்சள் நிற கோடுகள் வரையும் பணி தீவிரம்…!!

விபத்துக்களை தடுக்கும் பொருட்டு நான்கு வழிச்சாலையில் மஞ்சள் நிற கோடுகள் வரையும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

கோயம்புத்தூரில் இருந்து ஏராளமான வாகனங்கள் கிணத்துக்கடவு வழியாக போடப்பட்டிருக்கும் நான்கு வழி சாலையில் பொள்ளாச்சிக்கு சென்று வருகின்றன. இந்த சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல மஞ்சள் நிற கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த கோடுகள் வரையப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் மஞ்சள் நிற கோடுகள் அழிந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மீண்டும் மஞ்சள் நிற கோடுகளை போட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சாலையின் முக்கிய பகுதிகளில் எந்திரம் மூலம் மஞ்சள் நிற கோடுகளை வரையும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |