திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாலை சீரமைக்கும் பணியின் போது அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மேடு, பள்ளமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அப்பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.