செல்போன் டவர் பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று உள்ளது. இங்கு ராஜ் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த செல்போன் டவர் கதவை யாராவது திறந்தால் உடனே ராஜ் கைப்பேசிக்கு அலாரம் அடிக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்போன் டவரின் அறையை மர்ம நபர்கள் சிலர் திறந்துள்ளனர். அப்போது ராஜ் கைபேசிக்கு அலாரம் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ் செல்போன் டவர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் செல்போன் டவரின் பேட்டரிகளை திருடிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 70,000 இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.