அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி விழாவை தொடங்கி வைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் கிராமத்தில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி விழாவை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. பிரமுகர் வாலை முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ப.பா.போஸ், செல்வம், கண்ணன், முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பால செல்லப்பா, ஆனந்த அருள்மொழிவர்மன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பு ராஜா, ராம் பிரசாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு முடுக்கன்குளம் பகுதியில் விரைவில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.