தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். பொன்னியன் செல்வன் படத்தை தொடர்ந்து ‘சர்தார்’ கார்த்திக்கு சூப்பர் ஹிட் என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கார்த்தியின் சர்தார் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.70 கோடி நெருங்கி வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.