இன்றைய காலகட்டத்தில் பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிகளவு வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி தினத்தில் பங்குச்சந்தையில் நடந்த முகூர்த்த நேரம்(6:15 pm – 7:15 pm) சிறப்பு வர்த்தகத்தில் முன்னணி முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ரூ.101 கோடி சம்பாதித்துள்ளார். ஆம் அந்த ஒரு மணி நேர வர்த்தகத்தில் அவரிடமிருந்த பங்குகளின் விலை அதிகரித்து அவருக்கு 101 கோடி ஆதாயம் கிடைத்துள்ளது.
இந்தியன் ஹோட்டல்ஸ். டாடா மோட்டார்ஸ், கிரிசில் நிறுவன பங்குகளின் ஏற்றமே அவருக்கு லாபமாக அமைந்தது. பங்குசந்தை என்பது ஒரு பொதுச் சந்தை. அதில் நிறுவனங்களின் பங்கு மற்றும் தொடர்பான கூறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் வியாபாரம் செய்யப்படும். இவை பங்கு பரிமாற்றகத்தில் பட்டியலிடப்பட்ட கடனீட்டு ஆவணங்கள் ஆகும், அதோடு அவை தனிப்பட்ட விதத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும்.