தொழிலாளி ஒருவர் வைர வேட்டையில் 1 கோடி மதிப்புள்ள 26.11 காரட் எடையுள்ள வைரத்தை கண்டுபிடித்துள்ளார்.
வைர சுரங்கம் ஒன்று மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் உள்ளது. மேலும் இந்த சுரங்கத்தின் அருகிலுள்ள கிஷோர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் சுஷீல் சுக்லா மற்றும் அவரது கூட்டாளிகள் வைரம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வைர வேட்டையில் சுஷீல் சுக்லா நேற்று முன்தினம் 26.11 காரட் எடையுள்ள வைரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த வைரத்தின் மதிப்பு ரூ 1.20 கோடி என்று தெரியவந்துள்ளது. அந்த வைரத்தை ஏலத்தில் விற்று அதில் கிடைக்கும் கணிசமான தொகை சுஷீல் சுக்லாவுக்கு வழங்கப்படும் என்று பன்னாவின் உயர் அதிகாரி ரவி பட்டேல் தெரிவித்துள்ளார்.
மேலும் சுக்லா நிருபர்களிடம் கூறியதாவது “கடந்த 20 ஆண்டுகளாக வைரச்சுரங்க பணியில் நானும் எனது குடும்பத்தினரும் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இவ்வளவு பெரிய வைரம் கிடைத்ததில்லை. இதுவே முதல் முறையாகும். இந்த வைரத்தை ஏலத்தில் விட்டு வரும் பணத்தைக் கொண்டு சொந்தமாக தொழில் தொடங்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.