Categories
சினிமா தமிழ் சினிமா

அடிச்சது ஜாக்பாட்…. வசூலை அள்ளி குவிக்கும் வலிமை…. மகிழ்ச்சி வெள்ளத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்….!!!

நடிகர் அஜித் நடித்த வலிமை படம் ஒரே நாளில் சென்னையில் மட்டும் வசூல் வேட்டையில் குவித்துள்ளது.

அஜித் நடித்த படம் கடந்த 24-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். மேலும் முதல் காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் கூட்டமாக தியேட்டர்களில் குவிந்தனர். மேலும் இப்படத்தில் வந்த ஸ்டண்ட் காட்சிகளை பார்த்து அனைவரும் பிரமித்துப் போய் விட்டனர். இந்நிலையில் முதல் நாள் வசூலில் சென்னையில் மட்டும் 1.82 கோடி வசூல் செய்துள்ளது. இது அஜித்தின் கேரியரில் சென்னையில்  அவரிடம் படம் ஒரே நாளில் இவ்வளவு வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் ஒரே நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது வலிமை. இந்நிலையில் வார நாளில் ரிலீஸ் ஆகி ஒரு படம் இவ்வளவு வசூல் செய்திருப்பது தியேட்டர்கள் உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது. மேலும் வார இறுதி நாட்களில் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

Categories

Tech |