அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் கட்டுவதற்கு, அலுவலகங்களில் பணிபுரியும் வேலையாட்கள் என்று தினக்கூலி தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் அவர்களுக்கு கூலி தொகையை உயர்த்துவதற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இது அனைத்து அரசுத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அரசு துறைகளில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 225 ரூபாயிலிருந்து 300 ரூபாய் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா வெளியிட்டுள்ளார். மேலும் தொழிலாளர்களுக்கான கூலி தொகையை தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இன்னும் உயரவில்லை. இந்நிலையில் இந்த இடைக்காலத்தில் நிவாரணம் வழங்குவதற்காக தற்காலிகமாக இந்த தொகையை உயர்த்தி துணைநிலை ஆளுனர் அறிவித்துள்ளார். இந்த கூலி உயர்வு யாருக்கெல்லாம் கிடைக்கும் என்றால் அனைத்து அரசுத் துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், நகராட்சிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.