Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடிச்சி தூக்கிய குஜராத்….! 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜஸ்தான்…!!!!

ஐபிஎல் 15ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் மேத்யூ வேட் (ரன் அவுட் ), 12 ரன்களிலும் விஜய் ஷங்கர் 2 ரன்களிலும் ,சுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா ,அபினவ் மனோகர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய அபினவ் மனோகர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் . கடைசி நேரத்தில் மில்லர் ,ஹார்திக் பாண்டியா இருவரும் பந்துகளை ,பவுண்டரி சிக்சருக்கு பறக்கவிட்டனர் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது . சிறப்பாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரனகளும் , டேவிட் மில்லர் 14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.இலக்கை துரத்திக் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஓபனர் ஜாஸ் பட்லர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி, துவக்கம் முதலே ஸ்கோரை உயர்த்தி வந்தார். இந்நிலையில் தேவ்தத் படிக்கல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தார். தொடர்ந்து அஸ்வின் 8 (8) ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்த நெருக்கடியை சமாளிக்க அனைத்து பந்துகளையும் அடித்து ஆட முடிவுசெய்த பட்லர், பவர் பிளேவின் கடைசி பந்தில் லாக்கி பெர்குஷனிடம் போல்ட் ஆனார். பட்லர் அடித்தது 54 (24) ரன்கள் ஆகும். அடுத்து யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. சாம்சன் 11 (11), ஹெட்மையர் 29 (17), ரியான் பராக் 18 (19) போன்றவர்கள் சொதப்பலாக விளையாடி ஆட்டமிழந்தனர். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 155/9 ரன்கள் மட்டும் சேர்த்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. யாஷ் தயாள், லாக்கி பெர்குஷன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.

Categories

Tech |