Categories
உலக செய்திகள்

அடிச்சி நொறுக்கிப்புடுவேன் பாத்துக்கோ…! விஜயகாந்த் ஸ்டைலில் விமான பயணி ரகளை…. வைரல் வீடியோ….!!!!

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பிகே -283 ரக விமான பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இருந்து துபாய் நோக்கிம் ஒன்று புறப்பட்டது.   நடுவானில் விமானம் சென்றபோது, பயணி ஒருவர் திடீரென எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டார். பின்னர் இருக்கைகளை கைகளால் குத்தியும், விமானத்தின் ஜன்னலை கால்களால் உதைத்து சேதப்படுத்தி , பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கைகளின் நடுவில் காலை நீட்டி குப்புற படுத்துகொண்டார்.

பயணியின் விசித்திரமான செயலை பார்த்த பணியாளர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதையடுத்து, விமான சட்டத்தின்படி, விரும்பத்தகாத வேறு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பயணியை இருக்கை ஒன்றில் கயிறால் கட்டி வைத்தனர். விமானி உடனடியாக துபாயில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரிஇதன்பின்பு, விமானி உடனடியாக துபாயில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரினார். விமானம் துபாயில் இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை தங்களது காவலுக்கு கொண்டு சென்றனர். சம்பவம் எதிரொலியாக அந்த பயணியை பாகிஸ்தான் விமான நிறுவனம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

Categories

Tech |