Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடிச்சு தூக்கு’ பாடல் செய்த மாஸ் சாதனை… செம கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அடிச்சு தூக்கு பாடல் புதிய சாதனை படைத்துள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இயக்குனர் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, அனிகா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

மேலும் இந்த படத்திற்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அடிச்சு தூக்கு பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தலான சாதனை படைத்துள்ளது. இதனை டி.இமான் மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |