Categories
மாநில செய்திகள்

அடிச்சு வெளுக்க போகும் கனமழை… தமிழ்நாடு புதுச்சேரிக்கான முன்னறிவிப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில்,அந்த அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (11.04.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

12.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.13.04.2022: தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.14.04.2022: உள்தமிழகம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15.04.2022: மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), மயிலாடி (கன்னியாகுமரி ) தலா 6, காயல்பட்டினம் (தூத்துக்குடி ), எட்டயபுரம் (தூத்துக்குடி ), கோவிலங்குளம் (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), குருங்குளம் (தஞ்சாவூர்) தலா 5, காரைக்கால் (காரைக்கால்), தென்காசி (தென்காசி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி ), சூரலக்கோடுகன்னியாகுமரி), தொண்டி (ராமநாதபுரம் ) தலா 4, பாம்பன் (ராமநாதபுரம்), ஆய்க்குடி (தென்காசி), திருப்பூண்டி (நாகப்பட்டினம் ), சாத்தான்குளம் (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி ) , மதுக்கூர் (தஞ்சாவூர் ), திருச்செந்தூர் (தூத்துக்குடி), வேதாரண்யம் (நாகப்பட்டினம் ) தலா 3.

11.04.2022, 12.04.2022: தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |