Categories
உலக செய்திகள்

“அடிடா அடிடா..!” போலீஸ் காரில் சேற்றை அடித்த சிறுவர்கள்… சரியான பதிலடி கொடுத்த அதிகாரிகள்…!!

இங்கிலாந்தில் காவல்துறையினரின் வாகனத்தில் சேற்றை வாரி அடித்த சிறுவர்களுக்கு நூதனமான முறையில் தண்டனை வழங்கப்பட்டது. 

இங்கிலாந்தில் உள்ள Sunderland என்ற பகுதியில் இருக்கும் Peterlee என்ற நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முகமூடி அணிந்த 16 வயதுடைய சிறுவர்கள் இருவர் நிறுத்தப்பட்டிருந்த  காவல்துறையினரின் வாகனத்தில் சேற்றை வாரி அடித்துள்ளனர். அதன் பின்பு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களில் காவல்துறையினர் விசாரணையில் அந்த சிறுவர்களை இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். எனினும் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதால் சிறுவர்களுக்கு கடும் தண்டனை வழங்காமல் நல்லபடியாக பாடம் புகட்ட காவல்துறையினர் முடிவெடுத்தனர்.

இதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று பிற்பகலில் காவல்துறையினரின் வாகனங்கள் முழுவதையும் சிறுவர்களை பல் துலக்கும் பிரஷ் மற்றும் சோப்பு நீரை வைத்து சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் Peterlee Neighbourhood Team இன்ஸ்பெக்டர் Emma Kay கூறுகையில், வாகனங்கள் நகரும் போது அதில் பொருட்களை வீசினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அவர்கள் அறிய வாகனங்களை சுத்தம் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் போதும் என்று தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவர்கள் தங்கள் குற்றத்தை உணர்வதற்கான நேரம் மட்டுமன்றி காவல்துறையினரும் தங்கள் நேரத்தை சிறுவர்களுடன் சிறந்த முறையில் செலவிட வழங்கப்பட்ட வாய்ப்பு என்றும் கூறியுள்ளார். இதனை அவர்களின் பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டனர். மேலும் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் வரவேற்பை அளித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் இணையதளங்களில் வெளியாகி லைக்குகளை அள்ளிவருகிறது

Categories

Tech |