மறைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் மற்றும் அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு ‘விக்ஞானியன்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடிப்பதற்கு முன்னணி தமிழ் நடிகர்கள் 3 பேரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தயாராக உள்ளது. இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஶ்ரீகுமார் இயக்கி வருகிறார். மேலும் இதுகுறித்து இயக்குனர் ஶ்ரீகுமார் கூறியுள்ளதாவது, அப்துல்கலாம் வாழ்க்கையை படமாக எடுப்பதற்காக திரைக்கதை முழுவதுமாக எழுதி முடித்து விட்டோம் எனவும் அவர் நம்மை தொழில்நுட்பத்தின் உச்சத்திற்கே அழைத்து சென்றவர் என்று கூறியுள்ளார்.
பொக்ரான் சோதனையில் அப்துல் கலாமின் பங்களிப்பு மிகப்பெரியது. இந்த படத்தில், அப்துல்கலாம் எப்படி வலுவான இந்தியாவை உருவாக்கினார் என்பதையும் அறிவியல் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த பங்களிப்பையும் வெளிப்படுத்த இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.