புதிய பரிசீலனை திட்டத்தை கொண்டு வருவதற்காக இபிஎப்ஓ பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் திட்டமிட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொழிலாளர் பென்ஷன் திட்டம்1995 ன் கீழ் கட்டாயமாக கவர் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை கொண்டு வருவதற்காக இபிஎப்ஓ திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுவதற்கு புதிய பென்சன் திட்டத்தை கொண்டுவர இபிஎப்ஓ திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து இபிஎப்ஓ அதிகாரி ஒருவர் “அதிக பங்களிப்பு செலுத்துவோருக்கு அதிக பென்சன் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாகி வருகிறது.
எனவே மாதம் 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுவதற்கு புதிய பென்சன் திட்டத்தை பரிசீலனை செய்ய இருக்கிறது” என கூறியுள்ளார்.மேலும் மார்ச் 11, 12 தேதிகளில் கவுகாத்தியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் மத்திய அரசு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிய பென்சன் திட்டம் குறித்த உண்மைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.