உக்ரைன் மீது ரஷ்ய படைகளின் தாக்குதலானது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பல நாடுகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் பிரபல இணையதளம் ஒன்று இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இட்ச்.ஐஓ என்ற இணையதளமானது, உக்ரைனுக்கு நிதி உதவி வழங்குவோருக்கு, 1000-க்கும் மேற்பட்ட கேம்கள், டிஜிட்டல் புத்தகங்கள் மற்றும் காமிக்ஸ்களை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் குறைந்தபட்சம் 10 டாலர் நிதியுதவி வழங்குபவர்களுக்கு 566 வீடியோ கேம்கள் மற்றும் 317 டேபிள் டாப் கேம்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் மக்களுக்காக ₹ 7.64 கோடி சேர்ப்பதே இதன் இலக்காக உள்ளது. அந்த வகையில் இதுவரை 75% இலக்கை அடைந்து விட்டோம் என கூறியுள்ளது.