Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

அடிதூள்..! ஏர்டெல் & ஆக்சிஸ் வங்கி பயனர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

ஏர்டெல் நிறுவனமும், ஆக்ஸிஸ் வங்கியும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் 340 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான நிதி சலுகைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை பார்தி ஏர்டெல் மற்றும் ஆக்சிஸ் வங்கி இணைந்து தொடங்க அறிவித்து வருகின்றனர் இதன் மூலம் அதிக அளவு பலன் தரக்கூடிய கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு, அங்கீகரிக்கப்பட்ட உடனடி கடன்கள் மற்றும் பை நவ் பே லேட்டர் போன்ற பல சலுகைகளை வழங்க உள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் போன்ற பல பலன்களை வழங்க உள்ளது. நேற்று முதல் இந்த ஏர்டெல்-ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட் கூட்டணி மூலம் தொடங்க பட்டுள்ளது. இந்த கிரெடிட் கார்டானது தகுதியுள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லின் தேங்க்ஸ் அப் மூலம் பிரத்தியேகமாக கிடைக்கும். மேலும் இன்னும் கூடுதலாக டிஜிட்டல் சேவைகளின் தொகுப்பை ஆக்சிஸ் வங்கி, ஏர்டெல்லின் சி-பாஸ் இயங்குதளம் – ஏர்டெல் ஐக்யூ போன்றவற்றின் மூலம் பயன்படுத்தலாம்.

மேலும்  இது டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதில், குரல், செய்தி, வீடியோ, ஸ்ட்ரீமிங், அழைப்பு மறைத்தல் மற்றும் மெய்நிகர் தொடர்பு மைய தீர்வுகளை விரிவுபடுத்தும். இதன்மூலம் ஏர்டெல் வழங்கும் பல்வேறு இணைய பாதுகாப்பு சேவைகளையும் ஆக்சிஸ் வங்கி பயன்படுத்தும். மேலும், கிளவுட் மற்றும் டேட்டா சென்டர் சேவைகள் முழுவதும் ஒத்துழைப்பதை நிறுவனங்கள் மேலும் ஆராய உள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் MD & CEO கோபால் விட்டல் ஆக்சிஸ் உடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். மேலும் இதுபற்றி ஆக்சிஸ் வங்கியின் எம்.டி & சி.இ.ஓ அமிதாப் சௌத்ரி கூறியுள்ளதாவது, எங்கள் வங்கியில் பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், எனவே இதுபோன்ற கூட்டு கடன் மற்றும் பல்வேறு சலுகைகள் மூலம்  எங்களது அணுகலை விரிவுபடுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து பங்குச்சந்தையில் 3.55 சதவீதம் பார்தி ஏர்டெல் பங்குகள் உயர்ந்து ரூ.676.15 இருந்தது. மேலும்  5.80%  ஆக்ஸிஸ் வங்கியின் பங்குகள் குறைந்து ரூ.673.70 இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |