நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதை கவர்ந்தவர். தற்போது இவர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கின்றார். அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், சிவாங்கி, புகழ் போன்றோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்படுகின்றது. அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியாகிய நிலையில் கிராமம் முதல் நகரம் வரை ரசிகர்கள் மனதை கவர்ந்து இருக்கின்றது. இத்திரைப்படம் வருகிற மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் டான் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடபட்டுள்ளது.