சமூகஊடகங்களில் ஒன்றான டுவிட்டரில் டுவிட் செய்த பின், அதை எடிட் செய்யும் புதிய வசதியானது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் டுவிட் செய்த பின் அதை எடிட் செய்யும் வசதி இருந்தது. ஆனால் இப்போது டுவிட்டரிலும் டுவிட் செய்த பின் அதை எடிட் செய்யும் வசதியானது கொண்டுவர திட்டமிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு டுவிட்டரில் எடிட் செய்யும் வசதிக்காக மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை செயல்படுத்த எலான் மஸ் டுவிட்டரில் எடிட் ஆப்ஷன் வேண்டுமா என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறார்.
இதற்கிடையில் பயனர்களுக்கு பதிவுகளை பதிவிடும்போது எழுத்து பிழைகள், இலக்கணப் பிழைகள் ஏற்படுவதனால் இந்த எடிட் செய்யும் வசதியை கோரி வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. twitter நிறுவனம் எடிட் பட்டனுக்கான சோதனையை மிக விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. எனினும் தொடக்கத்தில் இந்த அம்சம் மாதத்துக்கு $4.99 செலுத்தும் அதன் ப்ளூ டிக் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் பொதுமக்கள் இவ்வசதியை தவறான வகையில் பயன்படுத்துகிறாரா என்பதனை ஆராய்ந்த பிறகே தீர்மானம்எடுக்க போவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.