Categories
மாநில செய்திகள்

அடிதூள்…! தமிழகத்தில் இப்படியொரு புத்தக கண்காட்சியா….? சர்பிரைஸ் கொடுக்க காத்திருக்கும் தமிழக அரசு….!!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர். வரும் 2023 ஆம் வருடம் சென்னை மாநகரில் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் 30 முதல் 40 நாடுகள் வரை பங்கேற்க உள்ளதாகவும் மூன்று நாட்கள் இந்த புத்தக கண்காட்சி அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தக கண்காட்சியோடு புத்தக ஆசிரியர்கள் சந்திப்பு, உரையாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வாக தமிழக அரசு கண்காட்சியின் போது உலகளாவிய மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தையும் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |