பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற 4 மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள் நாட்டு விமானங்களின் நேர செயல் திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதனடிப்படையில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், விமானங்களை உரிய நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து 2ஆம் இடத்தில் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும், கடைசி இடத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனமும் இருக்கிறது.
அத்துடன் இந்த வருடம் உள் நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையானது 9.88 கோடி ஆகும். இதன் மூலம் விமானத் துறை 59.16 சதவீதம் வளர்ச்சி பெற்று இருப்பதாகவும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 1.14 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளதாகவும் டிஜிசிஏ தரவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறைவான விலை விமான சேவைகளில் ஸ்பைஸ்ஜெட் தன் சந்தைப் பங்கை 7.3 சதவீதத்தில் தக்கவைத்துக் கொண்டது. அதே நேரம் கோ பர்ஸ்ட் செப்டம்பர் மாதத்தில் 7.9 % ஆக இருந்து அக்டோபரில் 7% ஆக அதன் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.