நாட்டின் முன்னணி மல்டிபிளக்ஸ் இரு திரையரங்குகள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்களில் ஒன்றான பிவிஆர் லிமிடெட் மற்றும் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குனர்களின் குழுவின் கூட்டமானது நேற்று நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைப்பதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக அஜய் பீஜிலியும் மற்றும் செயல் இயக்குனராக சஞ்சீவ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு நிறுவனங்கள் சேர்ந்து கைகோர்த்தது, தற்போது இந்த திரையரங்குகள் அனைத்தும் பிவிஆர் – ஐநாக்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 73 நகரங்களில் 871 திரையரங்குகள் பிவிஆர் நிறுவனத்திற்கு உள்ளனர்.
அதேபோல் 72 நகரங்களில் 675 திரையரங்குகள் ஐநாக்ஸ் நிறுவனத்திற்கு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரு நிறுவனங்களும் கொரோனா காலகட்டத்தில் பெரிதும் ஏற்பட்ட பாதிக்கப்பால், தற்போது இரு நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது.