தற்போது Spider-Man வரிசை படங்களை எடுப்பதில் பெரிய சவால் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் திரும்பத் திரும்ப ஒரே கதையோடு வெவ்வேறு நடிகர்களை வைத்துக்கொண்டு பல ஸ்பைடர் மேன் படங்கள் வந்துவிட்டது. ரசிகர்களை ஆச்சரியப்படுத்த வேண்டுமெனில் ஸ்பைடர் மேனை வைத்துக்கொண்டு புதிதாகவும் வித்தியாசமாகவும் ஏதாவது செய்தாக வேண்டும்.
இந்நிலையில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய ஹாலிவுட் படங்களின் வரிசையில் “ஸ்பைடர் மேன்- நோ வே ஹோம்” இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூபாய் 212 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூராசிக் வேர்ல்டு, தி லயன் கிங் படங்களின் வசூலை பின்னுக்குத் தள்ளி 1.67 பில்லியன் டாலர் வசூலோடு 6-வது இடத்தை பிடித்தது.