Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிதூள்…. மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்… போடு செம அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லா கடன் 5 லட்சம் வரை வழங்கப்படும். புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும். ஒருங்கிணைந்த மாபெரும் ஆடை உற்பத்தி தொழில் நுட்ப பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |