Categories
தேசிய செய்திகள்

அடிதூள்..! விரைவில் வானொலி சேவை…. ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்…!!!

ரயில் பயணங்களில் வானொலி பொழுதுபோக்குகளை பயணிகள் அனுபவிக்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

வடக்கு ரயில்வே வானொலி பொழுதுபோக்குகளை ரயில்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் டெல்லி, லக்னோ, போபால், அமிர்தசரஸ், டேராடூன், வாரணாசி உள்ளிட்ட  வழித்தடங்கள் வழியாக சதாப்தி – வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் போது வானொலி சேவையை வழங்க உள்ளதாக வடக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் 10 சதாப்தி மற்றும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வானொலி வாயிலாக பொழுதுபோக்கு, ரயில்வே தகவல் மற்றும் வணிக விளம்பரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது வானொலி பொழுதுபோக்குகளை அனுபவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |