பயனர்களின் கோரிக்கை படி வாட்ஸ்அப் நிறுவனமானது புது அம்சங்களை அன்றாடம் முயற்சி செய்து வருகிறது. தற்போது மற்றொரு அம்சமும் வாட்ஸ்அப்-ல் சேர்க்கப்பட இருக்கிறது. அதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. இந்த புது அம்சமானது பயனர்கள் தங்களது கணக்குகளை அண்ட்ராய்டு டேப்லெட்கள் உள்ளிட்ட 2ஆம் நிலை சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கும். இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு ஆணையத்தின் தகவலின் அடிப்படையில், புது அம்சம் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை ஸ்மார்ட் போனிலிருந்து ஆண்ட்ராய்டு டேப்லெட் செயலியுடன் இணைக்க அனுமதிக்கும். எளிமையாக கூறினால், 2ம் நிலை ஆண்ட்ராய்டு சாதனத்தில் தனி வாட்ஸ் அப் கணக்கு தேவைப்படாது. பயனர்கள் தங்களது டேப்லெட்டில் வாட்ஸ்அப்பை புதுப்பித்ததும், அவர்களின் போன் பயன்பாட்டில் இருந்து டேப்லெட் பயன்பாட்டிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்படி கேட்கப்படுவார்கள்.
பின் இணைக்கும் செயல்முறை முடிந்தவுடன், டேப்லெட் பயன்பாட்டிலுள்ள பயனர்களுக்கு வாட்ஸ்அப் சாட்டிங்கை மாற்றும். அதன்பின் நீங்கள் அங்கு இருந்து சாட்டிங் செய்யலாம் என தகவலில் கூறப்பட்டு உள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்த அம்சமானது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் நினைவூட்டல்களும் வாட்ஸ்அப்-ல் வர இருக்கிறது. வாட்ஸ்அப்-ல் பயனர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பட்டியல்களை நிர்வகிக்க குறிப்புகள், நினைவூட்டல்கள், ஷாப்பிங் பட்டியல்கள் ஏற்படுத்தி அனுப்பிக்கொள்ளலாம்.