சியோமி நிறுவனத்திடம் இருந்து தனியாகப் பிரிந்து சென்று, போக்கோ தனி நிறுவனமாக மாறியது. இதனைத் தொடர்ந்து போக்கோ நிறுவனம் பல ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் உலகின் மிகப்பெரிய MWC 2022 இந்த நிகழ்வு, பார்சிலோனாவில் நடக்கும்போது, Poco X4 Pro என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அசத்தல் ஸ்மார்ட்போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிப்பிள் கேமரா, 67W டர்போ சார்ஜிங் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது.
புதிய போக்கோ போனில் 6.67″ அங்குல அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட இந்த டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. 360Hz வரை டச் சேம்பிளிங் ரேட்டும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 13 for POCO ஸ்கிரின் உடன் இயங்குகிறது. 5ஜி ஆதரவுக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. கிராபிக்ஸ் செயல்பாடுகளுக்கு அட்ரினோ 619 எஞ்சின் உதவுகிறது.
இந்த போனில் கேமராவைப் பொருத்தவரை, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f/1.9 அபெர்ச்சரில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், எப்போதும் போல 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை பின்பக்க கேமரா அமைப்பில் அடங்கியுள்ளது. மேலும் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.புதிய போக்கோ போனில் 6ஜிபி, 8ஜிபி LPDDR4X ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரிக்காக 128ஜிபி, 256ஜிபி UFS2.2 வழங்கப்பட்டுள்ளது. அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக், NFC ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 5000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனை ஊக்குவிப்பதற்காக 67W டர்போ சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Laser blue, Laser black, POCO yellow ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு வெளியாகவுள்ளது. போக்கோ எக்ஸ் 4 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 205 கிராமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,999 என்ற தொடக்க விலையைக் கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.