Categories
சினிமா தமிழ் சினிமா

அடித்துக் கொலை செய்யப்பட்டாரா….? பிரபல பிக்பாஸ் நடிகை மரணத்தில் புதிய திருப்பம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், பிரபல பிக்பாஸ் நடிகையுமான சோனாலி போகாட் கோவாவுக்கு ஊழியர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த போது கடந்த 23-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சோனாலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சோனாலியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  கூறியுள்ளனர்.

இந்நிலையில் சோனாலி மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், சோனாலி கொலை செய்யப்பட்டதாக தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சோனாலியின் குடும்பத்தினர் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்போது சோனாலியின் உதவியாளர் சுதிர்சங்வான் மற்றும் அவருடைய நண்பர் சுக்விந்தர் வாசி ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சோனாலி மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கோவா மருத்துவமனையைச் சேர்ந்த தடவியல் நிபுணர்கள் சோனாலியின் உடலை ஆய்வு செய்த போது உடலில் பல காயங்கள் இருப்பது தெரியவந்தது. அதோடு சோனாலி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தடவியல் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சுக்விந்தர் வாசி மற்றும் சுதிர் சங்வான் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |