வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிரபு ராஜன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா!(24) என்ற மனைவி உள்ளார். திருமணம் நடந்த போது நித்யாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 2 லட்ச ரூபாய் பணம், 7 பவுன் தங்க நகை, சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரபுராஜனும் அவரது குடும்பத்தினரும் நித்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நித்யா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, பிரபுராஜன் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்துமாறு நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.