Categories
மாநில செய்திகள்

அடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி புதுப்பிப்பு – மார்ச் முதல் கட்டணம் வசூல்!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் மார்ச் 1ம் தேதி முதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த ஊழியர் டிரைவரை தாக்கியதால் அங்குத் திரண்ட பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டிரைவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதில் கண்ணாடிக் கதவுகள், தடுப்பு குழாய்கள், கேபிள்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன.

இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுங்கச்சாவடி சூறையாடப் பட்டதிலிருந்து இன்று வரை வாகனங்கள் கட்டணமின்றி செல்கின்றன. இதனிடையே சுங்கசாவடியில் அடித்து நொறுக்கப் பட்ட கண்ணாடிகள், கண்காணிப்பு கேமராக்கள், மின் விளக்குகள் ஆகியவை புதுப்பிக்கும் பணி நடந்து முடிந்தது.

சுங்கசாவடி திறக்கப்படும் தேதி அறிவிக்க பட்டிருந்தும் காவல் துறையினரின் அனுமதி பெறப்படாததால் ஒத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் கடந்த 33 நாட்களாக சுங்கச்சாவடியில் வாகனங்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இந்நிலையில், மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து சுங்கசாவடி கட்டணம் வசூலிக்க படும் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க புறக்காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |