மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் 70 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.