Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கண்ணன் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்து அவரிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |