Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அவர்களின் 2 பேரை காவல்துறையினர் பிடித்துவிட்டனர்.

இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் நவீன் குமார் மற்றும் சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அதன்பின் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |