சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது.
இவர் சட்ட விரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மேற்கொண்டு வருகின்றனர்.